Kollywood News

  • Home/
  • Cine News/
  • எதிர்பார்ப்பின் உச்சத்தில் தனுஷின் ‘கொடி’...ரசிகர்கள் உற்சாகம்..!!

எதிர்பார்ப்பின் உச்சத்தில் தனுஷின் ‘கொடி’...ரசிகர்கள் உற்சாகம்..!!


தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியானது ‘தொடரி’. திரையரங்குகளில் வெற்றிநடை போடுகிறது. இந்த படத்தினை தொடர்ந்து தனுஷின் நடிப்பில் தயாராக உள்ள ‘கொடி’ வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் சில புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தினை பெரிதளவும் எதிர்பார்க்கின்றனர். படத்தினை இயக்கியுள்ளார் ‘எதிர் நீச்சல்’, காக்கி சட்டை படத்தினை இயக்கிய துரை செந்தில் குமார். இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

முதல் முறையாக த்ரிஷா இந்த படத்தில் வில்லியாக தோன்றவிருக்கிறாராம். அரசியல் சார்ந்த கதையாக தான் இந்த படம் உருவாகியுள்ளதாம். தனுஷ் இரண்டு கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

தனது கெட்-அப்பினை மாற்றி நடித்தாலே அந்த படம் நிச்சயமாக ஹிட் அடிக்கும் என்பதால் இந்த படத்தினை பெரிதளவில் எதிர்பார்க்கிறார் தனுஷ். இவரது இந்த லுக் ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பினை பெற்றுள்ளது.

வரும் 28 ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்த ஐயமுமில்லை..

Read More about :

share