Kollywood News

  • Home/
  • Cine News/
  • இளைஞர்களுக்கான அரசியல்தான் இந்த ‘கொடி’ - தனுஷ்...

இளைஞர்களுக்கான அரசியல்தான் இந்த ‘கொடி’ - தனுஷ்...


முதல் முறையாக தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து உருவாகி வருகிறது ‘கொடி’. இப்படத்தினை துரை செந்தில் குமார் இயக்கியிருக்கிறார். வெற்றிமாறன் தயாரித்து வருகிறார். 

படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து வரும் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. த்ரிஷா மற்றும் அனுபமா இருவரும் படத்தின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். 

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. 

இப்படம் ஒரு அரசியலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டாலும், எந்த தலைவர்களையும் மறைமுகமாக தாக்குவதோ, அல்லது தற்போதைய அரசியல் தலைவர்களை தாக்குவதோ இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளதாம். 

இளைஞர்களுக்கு அரசியலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு படமாக உருவாகியிருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

share