Kollywood News

  • Home/
  • Cine News/
  • கொடி ‘யு’...காஷ்மோரா ‘யு/ஏ’.... தீபாவளி மோதலுக்கு தயாரான தனுஷ் & கார்த்தி...!!

கொடி ‘யு’...காஷ்மோரா ‘யு/ஏ’.... தீபாவளி மோதலுக்கு தயாரான தனுஷ் & கார்த்தி...!!


தனுஷ் நடிப்பில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி வருகியுள்ளது ‘கொடி’. முதல் முறையாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல ஒரு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இன்று சென்சார் அதிகாரிகளால் பார்க்கப்பட்ட இப்படம் அவர்களால் ‘யு’ சான்றிதழ் பெறப்பட்டிருக்கிறது. இதனால் தமிழக அரசின் வரிவிலக்கு பெறும் வாய்ப்பினையும் இப்படம் பெற்றுள்ளது..

இதனுடன் கார்த்தி நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘காஷ்மோரா’. அரசர் காலத்து கதையாக உருவாகியுள்ள இப்படம் கார்த்தியின் தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக அதிக செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகும். சுமார் 70 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு சென்சார் அதிகாரிகளால் ‘யு/ஏ’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களும் வரும் தீபாவளியை மையம் கொண்டு களம் காண இருப்பதால் தீபாவளி அன்று ரசிகர்களுக்கு நிச்சயம்  ஒரு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது. 

கொடியை ‘ரெட்டை’ தீபாவளியோடும், காஷ்மோராவை மிரட்டும் ‘கார்த்தி’ தீபாவளியோடும் ரசிகர்கள் கொண்டாடலாம்...

share