'கோலமாவு கோகிலா' டிரைலர் விமர்சனம்

ஹீரோக்கள் ஆதிக்கம் செலுத்தும் திரையுலகில் ஹீரோயின்களுக்கு ஒரு நல்ல வேடம் கிடைப்பதே அரிதான நிலையில் தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நயன்தாரா. 'மாயா', 'டோரா', 'அறம்' வரிசையில் 'கோலமாவு கோகிலா' இன்னொரு நயன்தாரா படம்.

கோலமாவு என்ற பெயரில் கடத்தப்படும் போதைப்பொருள் நயன்தாராவிடம் சிக்கியதால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதே இந்த படத்தின் கதையாக இருக்கும் என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. இந்த டிரைலரில் நயன்தாரா பேசும் வசனம் மிகவும் குறைவு என்றாலும் அவரது கண்கள் பேசும் ஆயிரம் பக்கங்கள்.

நயன்தாராவை ஒருதலையாய் காதலிக்கும் கேரக்டரில் இந்த படத்தில் நடித்துள்ள யோகிபாபு வழக்கம்போல் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம். 'கலக்க போவது யாரு' புகழ் ஜாக்குலினுக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் இருக்க வாய்ப்பு உள்ளது.

அனிருத்தின் பின்னனி இசை பட்டையை கிளப்புவதில் இருந்தே இந்த படம் வெற்றியை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டது. மொட்டை ராஜேந்திரன், சரண்யா வரும் ஒருசில காட்சிகளும் கலக்கல்.

மொத்தத்தில் இயக்குனர் நெல்சன் நயன்தாராவை வைத்து ஒரு விறுவிறுப்பாக காமெடி மற்றும் ஆக்சன் கலந்த ஒரு படத்தை இயக்கியுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source : Indiaglitz

Read More about :

share