Kollywood News

  • Home/
  • Cine News/
  • குற்றப்பயிற்சி துவக்கிய த்ரிஷா...

குற்றப்பயிற்சி துவக்கிய த்ரிஷா...



நடிகை த்ரிஷா நடிக்கவிருக்கும் அடுத்த படம் ‘குற்றப்பயிற்சி’. இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வர்ணிக் இப்படத்தை இயக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் கதை 1980 காலகட்டத்தின் பின்னணியில் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் த்ரிஷா பெண் துப்பறிவாளர் வேடம் ஏற்று நடிக்க, சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலரும் த்ரிஷாவுடன் நடிக்கின்றனர்.

இந்த படத்தை ‘ஸ்ரீகுருஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பாக ஜி.விவேகானந்தன் தயாரிக்கிறார்.ஒரு உண்மை சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதையாம் ‘குற்றப்பயிற்சி’ தமிழ் சினிமாவில் படத்தின் முதன்மை கதாபாத்திரம் பெண் துப்பறிவாளராக வருவது இதுதான் முதல் முறை என்கின்றனர் படக்குழுவினர். இந்த படத்திற்கு ரதன் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை பாபு குமார் கவனிக்கிறார். படத்தொகுப்பை மதனும், கலை இயக்கத்தை பாலசந்தரும் கவனிக்கிறார்கள்.

share