Kollywood News

  • Home/
  • Cine News/
  • கே வி ஆனந்த், விஜய் சேதுபதி மற்றும் டி ராஜேந்தர் இணையும் மெகா கூட்டணி...

கே வி ஆனந்த், விஜய் சேதுபதி மற்றும் டி ராஜேந்தர் இணையும் மெகா கூட்டணி...


இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உருவாகிறது புதிய படம். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் டி ராஜேந்தர் நடிக்கவுள்ளார்.

படத்தினை அநேகன், தனி ஒருவன் போன்ற வெற்றி படத்தினை தயாரித்த ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை கே வி ஆனந்த், எழுத்தாளர்கள் சுபா, கபிலன் வைரமுத்து ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

படத்தின் நாயகி, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது..

share