Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஷாலின் ‘சண்டக்கோழி 3’ விரைவில்.....

விஷாலின் ‘சண்டக்கோழி 3’ விரைவில்.....

2005-ம் ஆண்டு ரிலீஸான ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகமாக விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ராஜ்கிரண், வரலட்சுமி சரத்குமார், கஞ்சா கருப்பு, சண்முகராஜன், ஹரீஷ் பெராடி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில், யுவன் சங்கர் ராஜா இசையில் சமீபத்தில் ரிலீஸான படம் ‘சண்டக்கோழி 2’.

படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், வசூலில் குறை வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.எனவே, தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைத்திருப்பதால், இதன் மூன்றாம் பாகத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

எனவே விஷால் நடிப்பில் ‘சண்டக்கோழி’ படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது.

share