Kollywood News

  • Home/
  • Cine News/
  • மாரி-2வை பூஜை போட்டு துவக்கிய தனுஷ்!

மாரி-2வை பூஜை போட்டு துவக்கிய தனுஷ்!



சில வருடங்களுக்கு முன் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியானது மாரி. இப்படம் தனுஷின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய தீணியாக அமைந்தது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக இருக்கிறது. இந்தப் படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். முதல் பாகத்தை போலவே இதிலும் ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்க மலையாள நடிகர் டொவினோ தாமஸ் இந்தப்படத்தில் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ், எடிட்டராக பிரசன்னா ஜி.கே, ஆடை வடிவமைப்பாளராக வாசுகி பாஸ்கர், சண்டை பயிற்சியாளராக சில்வா ஆகியரும் இதில் பங்குபெறுகிறார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பை புத்தாண்டு அன்று பூஜையுடன் துவக்கியுள்ளனர். 

share