Kollywood News

  • Home/
  • Cine News/
  • மாரி-2' படத்தின் வில்லனாக டோவினோ தாமஸ் ஒப்பந்தம்!

மாரி-2' படத்தின் வில்லனாக டோவினோ தாமஸ் ஒப்பந்தம்!


'மாரி' படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. பாலாஜி மோகன் இயக்கும் இப்படத்தில் தனுஷின் ஜோடியாக, முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வால் நடிக்கிறார். 

மேலும் ரோபோ ஷங்கர் இதிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் ஒப்பந்தமாகியுள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 'பிரபுவிண்டே மக்கள்' என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் 'கோதா', 'அபி&அனு', 'தரங்கம்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More about :

share