Kollywood News

  • Home/
  • Cine News/
  • மாரி-2: அனிருத்தை கழட்டி விட்டு யுவனை பிடித்த தனுஷ்!

மாரி-2: அனிருத்தை கழட்டி விட்டு யுவனை பிடித்த தனுஷ்!


தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியானது மாரி. தனுஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்த அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக இருக்கிறது.

இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், தற்போது மற்றொரு தகவலை வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

பத்து வருட இடைவேளைக்கு பின்பு மீண்டும் தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரி படத்தின் முதல் பாகத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

share