Kollywood News

  • Home/
  • Cine News/
  • ’மாரி’யால் தனுஷ் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

’மாரி’யால் தனுஷ் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!



தனுஷ் நடிப்பில் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் வெளியானது மாரி. இப்படத்தினை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார்.

பொருளாதார ரீதியாக படம் வெற்றியடையவில்லை என்றாலும்  தனுஷின் ரசிகர்களுக்கு சரியான தீணியாக அமையாமல் போகவில்லை. அனிருத் இசையில் பாடல்கள், பின்னணி இசை என அனைத்திலும் மாஸ் எஸ்டர்டெயிண்மெண்ட் அளித்து ரசிகர்களை புது புத்துணர்ச்சியை அளித்தார் தனுஷ்.

நேற்றோடு மாரி வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததால் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியோடு கொண்டாடினர். மேலும், ஒரு இன்ப அதிர்ச்சியாக மாரி படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையை நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளார் இயக்குனர் பாலாஜி மோகன். 

மீண்டும் ஒரு மாஸ் எண்ட்ரீயை ரசிகர்களுக்கு அளிக்க வருகிறார் தனுஷ்... மாரிரிரிரிரிரிரிரிரி

Read More about :

share