Kollywood News

  • Home/
  • Cine News/
  • ’நானும் ஒரு விவசாயி': கின்னஸ் சாதனைக்காக மாணவர்களை அழைக்கும் ஆரி!

’நானும் ஒரு விவசாயி': கின்னஸ் சாதனைக்காக மாணவர்களை அழைக்கும் ஆரி!



விவசாயிகளை காக்கவும் விவசாயத்தை காக்கவும் நடிகர் ஆரி பல வழிகளில் தன்னால் இயன்ற உதவிகளையும் முயற்சிகளையும் எடுத்து வருகிறார். இதற்காக ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அறக்கட்டளையையும் இவர் நடத்தி வருகிறார்​.

விவசாயிகள் வாழ்வாதாரங்கள் அவர்களின் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்கான உதவிகளை பெருமளவில் செய்து வருகிறார் ஆரி.

இந்நிலையில் தன்னுடைய 'மாறுவோம் மாற்றுவோம்' அறக்கட்டளை சார்பில் ​​'நானும் ஒரு விவசாயி'  எனும் கின்னஸ் உலக சாதனைக்காக 5000 மாணவர்கள் பங்கேற்று நாற்று நடும் நிகழ்வு ஒன்றை நடத்தவிருக்கிறார். 

இதற்காக நாளை (29.08.2017, செய்வாய் கிழமை ) காலை 10 மணியளவில் நல்ல நிலம், ஆவணிப்பூர், திண்டிவனம் எனும் இடத்தில் இந்த நிகழ்வு நடைபெறயுள்ளது. இதில் மாணவர்கள் மட்டுமல்ல திரளான இளைஞர்களும் கலந்து கொள்ளுமாறு ஆரி அழைப்பு விடுத்துள்ளார். 

share