Kollywood News

  • Home/
  • Cine News/
  • மகேந்திரன் இறப்பதற்கு முன் சொன்ன கடைசி வார்த்தை இது தானாம், மிக உருக்கமான தகவல்

மகேந்திரன் இறப்பதற்கு முன் சொன்ன கடைசி வார்த்தை இது தானாம், மிக உருக்கமான தகவல்

தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா இயக்குனர்களில் ஒருவர் மகேந்திரன். இவர் இயக்கத்தில் முள்ளும் மலரும், உதிப்பூர்க்கள், ஜானி ஆகிய படங்கள் இன்றும் யாராலும் மறக்க முடியாது.

இவர் சமீபத்தில் உடல்நலம் முடியாமல் சிகிச்சை பலனின்றி இறந்தார், இது எல்லோரையும் கடும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் மகேந்திரன் குறித்து பேசும் போது ‘அவர் உடல்நலம் முடியாமல் இருக்கும் போது பார்க்க சென்றேன்.

அப்போது என்னிடம் “மிகவும் உடம்பு வலிக்குது சார், அப்படி வலியுடன் ஏன் வாழ வேண்டும், எனக்கு வாழவே பிடிக்கவில்லை” என்று கூறினார்’ என தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

Read More about :

share