Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய், விக்ரம் மற்றும் சிம்புவை இயக்கும் மணிரத்னம்

விஜய், விக்ரம் மற்றும் சிம்புவை இயக்கும் மணிரத்னம்

'பொன்னியின் செல்வன்' படத்தை விஜய், விக்ரம் மற்றும் சிம்பு அவர்களை இணைத்து படம் பண்ணும் முயற்சியில் இறங்கியுள்ளார் மணிரத்னம் 

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் 'செக்கச்சிவந்த வானம்' இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது தனது நீண்ட நாள் கனவான 'பொன்னியின் செல்வன்' படத்தை இப்போது மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் மணிரத்னம்.

இப்போது விஜய், விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோரை அணுகியிருக்கிறார் மணிரத்னம். இந்த முறை படமாக்குவதில் தீவிரம் காட்டுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். விஜய்யை தன் அலுவலகத்துக்கு அழைத்து, போட்டோ ஷூட் ஒன்றையும் முடித்திருக்கிறார் மணிரத்னம். கதாபாத்திர வடிவமைப்பு எப்படியிருந்தால் அவருக்குப் பொருந்துகிறது என்பதை இதில் முடிவு செய்ததாகத் தெரிவித்தனர்.

விக்ரம் மற்றும் சிம்பு இருவரையும் வைத்து விரைவில் இதே போன்றதொரு போட்டோ ஷூட்டும் விரைவில் நடக்கும் எனத் தெரிகிறது.

Read More about :

share