ஜூலைக்கு தயாராகும் மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’!


மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘செக்கச் சிவந்த வானம்’ இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி என ஒரு திரையுலக பட்டாளமே நடிக்கவிருக்கிறது.

மணிரத்னம் படம் என்றாலே சுமார் ஒரு வருடங்கள் படப்பிடிப்பு மட்டுமே நடைபெறும். ஆனால், இப்படத்தினை ஆறே மாதங்களில் முடித்து விரைவில் திரைக்கு கொண்டு வர மணிரத்னம் முடிவு செய்துள்ளாராம்.

அதிலும் குறிப்பாக ஜூலை மாதத்தில் படத்தினை திரைக்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று படுவேகமாக பணி புரிந்து வருகிறாராம் மணிரத்னம். 

அவ்வாறு ரெடியானால் மணிரத்னம் பட்டறையில் இருந்து வெளியே வரும் படங்களில் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட படங்களில் ‘செக்க சிவந்த வானம்’ முதல் இடத்தை பிடிக்கும். 

 ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை வைரமுத்து எழுத, படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார். ‘லைகா’ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. 

share