நான்கு நடிகர்களை வைத்து மணிரத்னம் இயக்கும் கேங்ஸ்டர் படம்..???கார்த்தி நடிப்பில் உருவான ‘காற்று வெளியிடை’ படத்தை முடித்த இயக்குனர் மணிரத்னம், தனது அடுத்த படைப்பிற்கான நாயகர்களை தேடும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. 

நான்கு ஹீரோக்களை இணைத்து ஒரு கேங்க்ஸ்டர் படத்தை விரைவில் இயக்கவிருக்கிறாராம் மணிரத்னம். மற்ற மூன்று கதாநாயகர்களாக அரவிந்த சாமி, துல்கர் சல்மான், மற்றும் பகத் பாசில் நடிக்கவிருக்கின்றனர்.

இந்த நால்வரையும் இணைத்து தென்னிந்திய சினிமாவை டார்கெட் செய்து ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் படத்தை இயக்குவது தான் மணிரத்னத்தின் திட்டமாம். 
அவரது போனில் நால்வரின் கால்ஷீட்டிற்காக  மெசேஜ் பறந்த வண்ணம் உள்ளதாம். 

இந்த கூட்டணி இணைந்தால் மீண்டும் ஒரு ’தளபதி’ மாதிரியான ஒரு ட்ரீட் ரசிகர்களுக்கு நிச்சயம் காத்திருக்கிறது. 


share