Kollywood News

  • Home/
  • Cine News/
  • மங்காத்தா-2 உறுதி!

மங்காத்தா-2 உறுதி!

மங்காத்தா என்ற ஒற்றை படத்தின் மூலம் தல ரசிகர்களின் மொத்த அன்பிற்கும் சொந்தக்காரர் ஆனார் வெங்கட்பிரபு. ஏனெனில் அப்படத்தில் அஜித்தை அவர்கள் எப்படியெல்லாம் பார்க்க ஆசைப்பட்டார்களோ அப்படியெல்லாம் ஸ்டைலாக காட்டியிருந்தார்.

இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்று 9 வருடங்களை கடந்த போதிலும் வெங்கட்பிரபுவை பார்க்கும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் நச்சரித்து வந்தனர். தற்போது இதற்கெல்லாம் ஒரு முடிவாக எங்களது கூட்டணி உறுதியானது என்று சமீபத்தில் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தற்போது எச்.வினோத்துடன் பிங்க் பட ரீமேக்கில் நடித்து வரும் அஜித் அடுத்து அதே எச்.வினோத்தின் சொந்த கதையில் நடித்து முடித்து அதன்பின்பு தான் வெங்கட்பிரபுவுடன் இணைவார் என்று தெரிகிறது. படத்தை பற்றிய அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து இருக்கின்றனர்.

Read More about :

share