Kollywood News

  • Home/
  • Cine News/
  • குடும்ப வகையறாவை கவர்ந்த விமலின் ’மன்னர் வகையறா’!

குடும்ப வகையறாவை கவர்ந்த விமலின் ’மன்னர் வகையறா’!


பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல், ஆனந்தி நடித்து கடந்த வெள்ளியன்று வெளியானது ‘மன்னர் வகையறா’.

இப்படத்தை முதல் முறையாக தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து விமலே தயாரித்திருந்தார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விமல் நடித்து வெளிவந்த படங்களில் அதிகப்படியான வசூலை ஈட்டி விமலின் சினிமா பயணத்தில் ஒரு ஏணிப்படியாக இப்படம் அமைந்தது என்பது மறுக்க முடியாது உண்மையும் கூட. 
 
அனைத்து சினிமா விமர்சகர்களிடம் இருந்து பாஸிடிவான விமர்சனங்களை மட்டுமே பெற்ற மன்னர் வகையறா குடும்பமாக பார்க்க கூடிய படமாகவும் அங்கீகாரம் பெற்றது. 

share