Kollywood News

  • Home/
  • Cine News/
  • மாஸ் குத்துப்பாட்டு, மரண தீம் மியூசிக்: விசுவாசம் இசை குறித்து டி.இமான்

மாஸ் குத்துப்பாட்டு, மரண தீம் மியூசிக்: விசுவாசம் இசை குறித்து டி.இமான்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு இந்நேரம் ஆரம்பித்திருக்க வேண்டியது. ஆனால் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த படத்தின் இசையமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிற்கு தேவையான இரண்டு பாடல்களையும் அவர் கம்போஸ் செய்து முடிவுத்துவிட்டதாகவும், அவற்றில் ஒன்று அஜித்தின் அறிமுகப்பாடல் என்றும் கூறப்படுகிறது.இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த படத்தின் இசை குறித்தும் அஜித் படத்தில் முதல்முறையாக பணியாற்றுவது குறித்தும் டி.இமான் கூறியதாவது: 'தீம் மியூசிக் இல்லாத தல படம் இருக்க வாய்ப்பே இல்லை. இந்த படத்திலும் மரண தீம் மியூசிக் ஒன்றை தயார் செய்துள்ளோம். அதுமட்டுமின்றி மாஸ் குத்துபாட்டு ஒன்றும், எனது ஸ்டைலில் மெலடி பாடல்களும் இந்த படத்தில் இருக்கும். தல அஜித் படத்தில் பணிபுரிவது ஒரு மகத்தான் அனுபவம் என்று டி.இமான் கூறியுள்ளார்.
அஜித், நயன்தாரா, யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 Source - Indiaglitz

share