Kollywood News

  • Home/
  • Cine News/
  • சீனாவில்‘மெர்சல்’ விஜய்

சீனாவில்‘மெர்சல்’ விஜய்

விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸான படம் ‘மெர்சல். விஜய் மூன்று வேடங்களில் நடித்த இந்தப் படத்தில், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்தனர். ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். இப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது மட்டுமின்றி, உலக அளவில்  பல்வேறு விருதுகளில் இடம்பெற்றது

இதனை தொடர்ந்து சீனாவில் ‘மெர்சல்’ படம் திரையிடப்பட இருக்கிறது. இப்படத்தை சீன மொழியில் வெளியிடுவதற்கான உரிமையை எச்.ஜி.சி. நிறுவனம் பெற்றுள்ளது.

சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் 'மெர்சல்' என்பது குறிப்பிடத்தக்கது.

Read More about :

share