Kollywood News

  • Home/
  • Cine News/
  • இரண்டே நாளில் 20 புதிய படங்கள்

இரண்டே நாளில் 20 புதிய படங்கள்

தமிழ் சீனிமாவில் பெரிய படங்களால் சிறிய பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது தயாரிப்பாளர் சங்கம்.

திரைப்பட வெளியீட்டு தேதிகள் முறைப்படுத்தப்பட்டு வந்தது. 
அதன்படி, தணிக்கை செய்யப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படங்கள் மட்டும் வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி பெறவில்லை எனில், திரையிட தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையை ஒட்டி, 52 புதிய படங்களை திரையிட தயாரிப்பாளர் சங்கத்திடம் அனுமதி கேட்கப்பட்டது.

DEC 14ஆம் தேதி விக்ரம் பிரபு நடித்த துப்பாக்கி முனை, ஜானி, நுங்கம்பாக்கம், தேவகோட்டை காதல், பயங்கரமான ஆளு, துலாம், பிரபு, திரு, ஒடியன், சமுத்திர புத்திரன், ஸ்பைடர்மேன், புதிய பிரபஞ்சம் ஆகிய 11 படங்கள் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளன. 

DEC 21ஆம் தேதி,விஜய் சேதுபதியின் சீதக்காதி, ஜெயம் ரவியின் அடங்க மறு, தனுஷின் மாரி 2, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜீரோ, கேஜிஎப், அந்தரிக்‌ஷம், படி படி லெச்சே மனசு ஆகிய 9 படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன இந்நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி மேலும் 22 படங்கள் வெளியாகின்றன.

Read More about :

share