Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் கூட பைரவா பண்ணிட்டிங்க. அஜித்துடன் கூட்டணி எப்போ! சந்தோஷ் நாராயணன்

விஜய் கூட பைரவா பண்ணிட்டிங்க. அஜித்துடன் கூட்டணி எப்போ! சந்தோஷ் நாராயணன்

"வெயிட்டிங் தான். தல படம் வந்துடுச்சுனு உடனே ஓகே சொல்லிட்டு சரியா பண்ணலைனா தப்பாகிடும். ரொம்ப எதிர்பார்ப்பு இருக்கும். அதை திருப்திப்படுத்தனும். அப்படி ஒரு வாய்ப்பு வந்துதுனா மியூசிக் பண்ண நான் ரெடி. `கபாலி` பண்ணிட்டு இருந்த சமயம், ஏர்போர்ட்ல அவரை மீட் பண்னேன். நான் யாருனு தெரியாமலே என் கையை பிடிச்சி பேசிட்டு இருந்தார். `என்ன பண்றிங்கனு கேட்டதுக்கு, `மியூசிக் பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னேன். `நல்ல பண்ணுங்க. நிச்சியமா பெரிய இடத்துக்கு வருவீங்கனு பேசிட்டு இருக்கும்போது, என் மனைவி மீனாட்சி வந்து, `இவர் பேர் சந்தோஷ் நாராயணன்; இந்தப் படமெல்லாம் பண்ணிருக்கார்னு அவர்கிட்ட சொன்னவுடனே தனியா கூப்டிட்டு போய், சாரிங்க. எனக்கு தெரியலனு சொன்னார். அப்புறம் நாங்க படம் பத்தி பேசிட்டு இருந்தபோது, ஒருத்தர் போட்டோ எடுத்தார். அவரைக் கூப்பிட்டு `என்ன படிச்சியிருக்கீங்கனு கேட்டுட்டு, `இவ்ளோ படிச்சியிருக்கீங்க. இமிகிரேஷன்ல போட்டோ எடுக்கக்கூடாதுனு தெரியும்ல. நம்ம வெளிய 
போய் எடுத்துக்கலாம்னு சொல்லி அனுப்பினார். அவர் டென்ஷன் ஆகிக்கூட பேசிருக்கலாம். ஆனா, அவர் அப்படி பண்ணலை. அதனாலதான் அவரை எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்.''

Read More about :

share