நாச்சியார் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 

36 வயதினிலேமகளிர் மட்டும்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நாச்சியார்’.. சூர்யாவின் திரையுலக பயணத்தில் முக்கியமான இரண்டு படங்களை கொடுத்த இயக்குனர் பாலாவின் டைரக்சனில், முதன்முறையாக ஜோதிகா நடித்துள்ளார் என்பது தான் ஹைலைட்டான விஷயமே.

 

மேலும் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்களும், படத்தின் டீசரும் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன.. இந்தநிலையில் வரும் பிப்-9ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் இசைவெளியீட்டு விழா தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.


share