Kollywood News

  • Home/
  • Cine News/
  • நடிகர் சங்கத்தில் பிளவு... பொன்வண்ணன் ராஜினாமா!

நடிகர் சங்கத்தில் பிளவு... பொன்வண்ணன் ராஜினாமா!



தமிழக அரசியல் தேர்தலை விட படுபயங்கரமான பரபரப்புடன் நடந்து முடிந்தது நடிகர் சங்க தேர்தல். விஷால் தலைமையிலான அணியில் நாசர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட, விஷால் செயலாளர் ஆனார்.

மேலும் நடிகர் சங்கத்தில் Vice President-ஆக பொன்வண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். திடீரென  நடிகர் விஷால் அரசியல் பக்கம் திரும்பியது பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டது.

தற்போது பொன்வண்ணன் சில தனிப்பட்ட பிரச்சனை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், காரணம் என்னவோ விஷாலின் அரசியல் பிரவேசம் தான் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

share