Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நமீதா..!!

ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் நமீதா..!!


தமிழ் நடிகைகளில் ஜெயலலிதா, குஷ்பூ, ரோஜா, நக்மா என பலர் முன்னணி நாயகிகளாக வலம் வந்து இப்போது அரசியலில் ஒரு பிரபல விஐபிகளாக மாறிவிட்டனர். அதில் ஜெயலலிதா தற்போது தமிழக அரசின் முதலமைச்சராக இருந்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது நடிகை நமீதாவும் தன்னை ஒரு மிகப்பெரிய கட்சியோடு தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

  அரசியலில் இறங்கி ஏழை மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என தனது நீண்ட கால கனவாக கொண்டு வாழ்ந்து வந்தவர் நமீதா. இதை ஒரு நிகழ்ச்சியில் அவரே கூறியுள்ளார்.

விரைவில் அரசியல் பிரவேசம் காண்பேன், அது எந்த கட்சி என்பதை இப்போது தன்னால் கூற இயலாது என்று கூறினார். ஆனால் தற்போது அவர் தன்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். நேற்று மாலை திருச்சியில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் அதிமுக தலைவர் ஜெயலலிதா முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார்.

அதிமுகவிற்கு ஆதரவாக விரைவில் தனது பிராச்சார பயணத்தை தொடங்குவார் என தெரிகிறது.. விரைவில் அதிமுக வில் அசைக்க முடியாத ஒரு பதவியுடன் வலம் வருவார் என தெரிகிறது...

share