Kollywood News

  • Home/
  • Cine News/
  • 'நட்பே துணை' ரிலீஸ் தேதியை அறிவித்த ஹிப்ஹாப் தமிழா ஆதி:

'நட்பே துணை' ரிலீஸ் தேதியை அறிவித்த ஹிப்ஹாப் தமிழா ஆதி:

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசையை முறுக்கு' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்து அவர் நடித்திருக்கும் படம் 'நட்பே துணை'. சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி ரிலீஸ்க்கு தயாராகிவுள்ளது.  

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். 

ஹிப்ஹாப் தமிழா ஆதி, அனேகா, கரு பழனியப்பன், விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், ஹரிஷ் உத்தமன் எருமசனி புகழ் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் அரவிந்த் சிங் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது.

share