Kollywood News

  • Home/
  • Cine News/
  • நட்பே துணை மூன்றாவது பாடல்

நட்பே துணை மூன்றாவது பாடல்

      மீசைய முறுக்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாகவும், இயக்குனராகவும் அறிமுகமானவர் நம் எல்லோருக்கும் பரிட்சியமான இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள். அவர் ஜல்லிக்கட்டு பாடலின் மூலம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தவராகவும், தன்னம்பிக்கை ஊட்டுபவராகவும் பார்க்கப்படுகிறார்.   


     இவர் நடிக்கும் அடுத்த படம் நட்பே துணை. இந்த படத்தில் ஆதி, விக்னேஷ்காந்த், கரு. பழனியப்பன், இன்னும் இணையத்தில் வைரல் ஆன நிறைய இளம் நடிகர்கள் நடிக்கின்றனர். படத்தின் வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பிப் 14 அன்று படத்தின் 3வது பாடலான ஆத்தாடி பாடல் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கும் ஹிப் ஹாப் ஆதி தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Read More about :

share