Kollywood News

  • Home/
  • Cine News/
  • 'ஐரா' படத்தில் கோட்டை விட்ட நயன்தாரா:

'ஐரா' படத்தில் கோட்டை விட்ட நயன்தாரா:

நயன்தாரா நடிப்பில் வெளியான படம் 'ஐரா' இப்படம் வசூல் ரீதியாக போதுமான வரவேற்பைப் பெறவில்லை. 

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, ஆகிய படங்கள் அனைத்துமே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள்.

அந்த வரிசையில், தற்போது மா மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள ஐரா படம் கடந்த 28ஆம் தேதி வெளியானது. ஆனால், வெளியானது முதல் தொடர்ந்து எதிர்மறை விமர்சனத்தைப் பெற்று வந்தது. இப்படம் ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் மட்டும் ரூ.7.5 கோடி வரையில் வசூல் செய்துள்ளது. 
 

share