Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்சேதுபதியுடன் மீண்டும் நயன்தாரா: பர்ஸ்ட்லுக்

விஜய்சேதுபதியுடன் மீண்டும் நயன்தாரா: பர்ஸ்ட்லுக்

விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரெளடிதான்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, திரையில் இந்த ஜோடியின் கெமிக்ஸ்ட்ரி அனைவராலும் ரசிக்கப்பட்டது. இந்த நிலையில் இதே ஜோடி மீண்டும் நடித்து வரும் படம் 'இமைக்கா நொடிகள்' என்று செய்தியை ஏற்கனவே பார்த்த நிலையில் தற்போது இருவரும் இணைந்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளிவந்துள்ளது.

சிபிஐ அதிகாரியாக நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக விஜய்சேதுபதி, சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார. சிறப்பு தோற்றமாக இருந்தாலும் அவருடைய கேரக்டர் திரையில் 15 நிமிடங்களுக்கும் மேல் தோன்றும் வகையில் உள்ளது என்றும், விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகிய இருவருக்கும் ஒரு பாடலும் உள்ளதாகவும் இயக்குனர் அஜய்ஞானமுத்து தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே அருள்நிதி நடித்த 'டிமாண்டி காலனி' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நயன்தாராவின் கணவர் கேரக்டரை முடிவுசெய்த பின்னர் அந்த கேரக்டருக்கு விஜய்சேதுபதியை தவிர என்னால் வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை என்றும், இருவரின் காட்சிகள் சில பகுதிகள் என்றாலும் அது இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் அஜயஞானமுத்து தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : Indiaglitz

Read More about :

share