ஒரே படத்தில் நயன்தாரா-தமன்னா

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடித்த 'நண்பேண்டா' படத்தில் தமன்னா ஒருசில காட்சிகளில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார் என்பது தெரிந்ததே. ஆனால் முதல் முறையாக நயன்தாரா, தமன்னா ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். அந்த படம் தான் தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரமாண்டமாக தயாராகி வரும் 'சை ரா நரசிம்ம ரெட்டி' திரைப்படம்

சிரஞ்சீவி முக்கிய வேடத்தில் நடித்து வரும் சை ரா நரசிம்ம ரெட்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் அமிதாப்பச்சன், ஜெகபதி பாபு, விஜய் சேதுபதி, சுதீப் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் தமன்னாவும் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : indiaglitz

Read More about :

share