Kollywood News

  • Home/
  • Cine News/
  • கேமராவின் மொழியைப் புரிந்து கொண்டவர் நயன்தாரா

கேமராவின் மொழியைப் புரிந்து கொண்டவர் நயன்தாரா

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வருகிற வியாழக்கிழமை (ஆகஸ்ட் 30) ரிலீஸாக இருக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’. நயன்தாரா பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் கஷ்யப் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நயன்தாராவின் கணவராக கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. கேமியோ ஃபிலிம்ஸ் இந்தியா சார்பில் சி.ஜே.ஜெயக்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“நயன்தாரா வெறும் மேக்கப் போட்டுக்கொண்டு மட்டும் லென்ஸ் முன் நிற்கவில்லை. கேமராவின் மொழியைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப சரியாகத் தன்னை வெளிப்படுத்துவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்” எனப் பாராட்டியுள்ளார் ஆர்.டி.ராஜசேகர்.
 

Read More about :

share