Kollywood News

  • Home/
  • Cine News/
  • ராதாரவி சர்ச்சை பேச்சிக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா:

ராதாரவி சர்ச்சை பேச்சிக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா:

நடிகர் ராதாரவி அவர்கள் நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது சர்ச்சைக்குரிய வகையில் நயன்தாராவை பற்றி பேசினார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இதுவரை அமைதியாக இருந்த நடிகை நயன்தாரா தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முதலில் தனது அறிக்கையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு இடைநீக்கம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி,
 
மூத்த நடிகரான ராதாரவி அவர்கள் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருந்திருக்கு வேண்டும் என்றும், ஆனால் திரைப்படத்தில் சரியாக வாய்ப்பு கிடைக்காமல் போனதால் இதுபோன்று கீழ்த்தரமாக பேசி பிரபலமடைவதாகவும், திரைப்பட விழாவில் நடிகர் ராதாரவி பேசியபோது சிலர் கைதட்டி ரசித்து சிரித்து மகிழ்ந்ததாகவும், இதுபோன்ற ரசிகர்கள் உள்ளவரை ராதாரவி போன்றோர் தரக்குறைவாக பேசுவது நீடிக்கும் என்றும் வருத்தத்துடன் நயன்தாரா தெரிவித்துள்ளார்.

'உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெண்கள் கொடுக்கும் புகார் பற்றி விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்றும், அந்த வகையில் தம்மைப் பற்றி நடிகர் ராதாரவி பேசியது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்துமாறு தென்னிந்திய நடிகர் சங்கத்தை தான் கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்'.

மேலும் பெண்களை மிகவும் இழிவாக பேசுபவர்களை பற்றி மிகவும் வருந்துவதாகவும், இருப்பினும் கடவுள் அருளால் மீண்டும் தனது பணியை தொடங்கவிருப்பதாகவும் நயன்தாரா  தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

Read More about :

share