Kollywood News

  • Home/
  • Cine News/
  • நயன்தாராவை கழட்டி விட்ட ‘விஜய்62’ டீம்!

நயன்தாராவை கழட்டி விட்ட ‘விஜய்62’ டீம்!



மெர்சல் படத்திற்கு விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை பெறுகிறார் முருகதாஸ். இப்படத்தில் விஜய்யுடன் நடிக்கும் கதாநாயகி யார் என்பதற்கான தேர்வு தான் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறதாம். 

இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கலாம் என்ற தகவள் வெளியாகியுள்ளது. 2003 ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்திற்கு பிறகு விஜய் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி சேரவே இல்லை. அதேபோல் முருகதாஸ் தனது முதல் படமாகிய தீனாவிற்குப் பிறகு யுவனுடன் பணியாற்றவே இல்லை. இந்நிலையும் இம்மூவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைய இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், இந்த படத்தில் பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா அல்லது ரகுல் ப்ரீத் சிங் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

முன்னதாக, நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. 2009-ம் ஆண்டு வெளியான வில்லு படத்தில் மட்டுமே நயன் தாரா விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

share