Kollywood News

  • Home/
  • Cine News/
  • நீண்ட காத்திருப்புக்கு பிறகு வெளிவரும் "நெடுநல்வாடை" :

நீண்ட காத்திருப்புக்கு பிறகு வெளிவரும் "நெடுநல்வாடை" :

தமிழ் திரையுலகில் சமுதாய பின்னணியில் உருவாக்கப்படும் படங்கள் சில நேரங்களில் பல தடங்கல்களை சந்திக்கும். அந்த வகையில் "நெடுநல்வாடை" 2 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு திரைக்கு வரவுள்ளது படத்தின் வெளியீடு பற்றி கூறிய இயக்குனர் "செல்வக்கண்ணன்". இந்த படம் உருவாக முக்கிய காரணம் தன்  உடன் படித்த நண்பர்கள்  தான் எனவும்; அவர்கள் 50 பேர் இணைந்து எனக்காக இந்த படத்தை தயாரித்துள்ளனர் என்று கூறினார். மேலும் பெண்களுக்கான படமாக "நெடுநல்வாடை" நிச்சயம் இருக்கும். மகன் வழி பேரன்களுக்கு தான் சொத்து கிடைக்கும் என்றும்; ஈம சடங்குகளில் கூட மகள் வழி பிள்ளைகளை சேர்ப்பதில்லை இந்த சமூகம். இது போன்ற பிரச்சனைகளை படம் பேசி உள்ளது. இன்னொரு பக்கம் காதல் தோல்விகள் பெண்களால் தான் நடக்கிறது என்றும்; பெண்களை குற்றவாளிகள் போல சித்தரிக்கும் போக்கு அதிகமாக உள்ளது. அனால் எதார்த்தம் என்ன? பெண்கள் பக்கம் உள்ள கரணங்கள் எடுத்து கூறப்பட்டு இருக்கிறது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு வெளிவரும் நெடுநல்வாடை திரைப்படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம். இந்த படத்தில் "பூ" ராம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார், அவர் உடன் இளங்கோ படத்தின் நாயகனாக நடிக்கிறார் அஞ்சலி நாயர் கதாநாயகி ஆக சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படம் மார்ச் 15-ம்  தேதி வெளிவரவுள்ளது 

Read More about :

share