Kollywood News

  • Home/
  • Cine News/
  • வாட்ச்மேன் படத்துக்கு புதுவிதமாக விளம்பரம் செய்யும் படக்குழு:

வாட்ச்மேன் படத்துக்கு புதுவிதமாக விளம்பரம் செய்யும் படக்குழு:

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘வாட்ச்மேன்’ படம் உருவாகி இருக்கிறது. டபுள் மீனிங் புரடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கிறார். இந்த படம் வரும் ஏப்ரல் 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த பட நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசியதாவது:-

‘இந்த படம் முழுக்க குழந்தைகளோடு குடும்பமாக ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் வித்தியாசமான முறையில் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். முக்கியமாக பொள்ளாச்சியில் சமீபத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டனர்.

இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் அந்த நகரின் முக்கிய இடங்களில் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்த இருக்கிறார். வாட்ச்மேன் பொள்ளாச்சி நகரத்தையே கண்காணிப்பார்’.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

share