Kollywood News

  • Home/
  • Cine News/
  • வெளியானது NGK டீஸர்

வெளியானது NGK டீஸர்

     இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூரியா நடிப்பில் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம் NGK. தற்பொழுது கார்த்தியின் தேவ் படம் இன்று FEB 14 வெளியானது அந்த படத்தோடு NGK டீசரும் வெளியிடப்பட்டது. நேற்று டீஸர் ட்விட்டரில் கசிந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று அதிகாரபூர்வமாக வெளியான டீஸர் நல்ல வரவேற்ப்பையும் விமர்சனத்தையும் ரசிகர்களிடையே பெற்றுள்ளது. செல்வராகவன், சூர்யாவிடம் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது அதை இந்த டீஸர் ஒரு அளவிற்கு பூர்த்தி செய்துள்ளது.

    இந்த படத்தில் சூர்யா உடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். சினிமா வட்டாரங்களில் பெரிதும் பேசப்படும் கூட்டணியான செல்வராகவன், யுவன் ஷங்கர்ராஜா கூட்டணி மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளது படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. 

Read More about :

share