நடிகர் கார்த்தி நடிப்பில் feb 14 ம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் தேவ். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார் இவர்களோடு விக்னேஷ்காந்த், பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தை ரஜத் இயக்குகிறார் படத்தின் இசை ஹாரிஸ் ஜெயராஜ் கைவண்ணத்தில் மிகவும் துள்ளலாக வெளிப்பட்டுள்ளது. படம் வெளிவரப்போகும் தருவாயில் இன்னொரு செய்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அதிகப்படுத்தியுள்ளது. சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் நீண்டநாட்களாக படப்பிடிப்பில் இருந்த N.G.K திரைப்படத்தின் டீஸர் feb 14 அன்று திரையரங்குகளிலும் இணையத்திலும் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தான் அந்த உற்சாகத்திற்கு காரணம். கார்த்தியின் தேவ் படத்திற்கு முன்பதிவுகள் நடந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.