Kollywood News

  • Home/
  • Cine News/
  • நானும் அரசியலில் தீவிரமாக களம் இறங்க போகிறேன்... வரிந்து கட்டும் உதயநிதி!

நானும் அரசியலில் தீவிரமாக களம் இறங்க போகிறேன்... வரிந்து கட்டும் உதயநிதி!



நிமிர் படத்தின் ப்ரொமோஷனில் பிஸியாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தனியார் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். 

அதில் அவர், “நான் ஏற்கனவே திமுகவில் இருக்கிறேன். சினிமாவிற்கு வருவதற்கு முன்பே அரசியலில் ஈடுபட்டு வந்தேன். தேர்தலின் போது திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், முரசொலிமாறன் ஆகியோருக்காக வாக்குகள் சேகரித்துள்ளேன். 

ஆனால், சினிமாவில் நடிக்க தொடங்கிய பின் அரசியலை விட்டு விலகி இருந்தேன். இப்போது, பல நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக அறிவித்து வருகின்றனர். எனவே, நானும் தீவிர அரசியலுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டதாக உணர்கிறேன்” என்றார். 

share