Kollywood News

  • Home/
  • Cine News/
  • ’ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் மூலம் வெற்றி வாகை சூடிய மக்கள் செல்வன்... !

’ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் மூலம் வெற்றி வாகை சூடிய மக்கள் செல்வன்... !



ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவானது ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. 

கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.

படம் வெளியான நாள் முதல் அனைத்து தரப்பு மக்களிடையேயும் இருந்து நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தினை வெளியிட்ட திரையரங்குகளின் உரிமையாளர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

மக்கள் செல்வனை நம்பி இப்படத்தை வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் யாரும் நஷ்டம் அடைய மாட்டார்கள் என பிரபல திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

படம் முழுக்க முழுக்க குடும்பம் குடும்பமாய் சென்று ரசிக்கும் படியாக அமைந்துள்ளதால் திரையரங்குகளுக்கு குடும்பங்கள் படையெடுத்துள்ளன..

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் -  விஜய் சேதுபதி திரைப்படங்களில் மேலும் ஒரு வெற்றி மகுடம்.. 

share