Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் சர்க்கார் படத்திற்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த்யை தொடர்ந்து பா. ரஞ்சித் ஆதரவு

விஜய் சர்க்கார் படத்திற்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த்யை தொடர்ந்து பா. ரஞ்சித் ஆதரவு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படத்திற்கு அதிமுகவினர்களின் எதிர்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. ஒருசில திரையரங்குகளில் சர்கார்' காட்சிகள் ரத்து செய்யும் அளவுக்கு போராட்டம் வலுத்து வருவதால் படக்குழுவினர்கல் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். 

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார். பா. ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் - சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் என்றோ “ஜனநாயகம்” அழிந்து/இழந்து போய்விட்டது என்று!!! இவ்வாறு பா. ரஞ்சித் தெரிவித்துள்ளனர்.

Read More about :

share