Kollywood News

  • Home/
  • Cine News/
  • பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ’பத்மாவதி’ ஜனவரி 26-ல் வெளியாகிறது!

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ’பத்மாவதி’ ஜனவரி 26-ல் வெளியாகிறது!



சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிந்திப் படம் ‘பத்மாவதி’. தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி, பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

ராஜ்புத் வம்சத்து அரசியான ராணி பத்மினியின் கதை இது. ராணி பத்மினியாக தீபிகா படுகோனே   நடித்துள்ளார். இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. குறிப்பாக, ஸ்ரீ ராஜ்புத் கர்ண சேனை என்ற அமைப்பு, பல்வேறு குடைச்சல்களைக் கொடுத்து வருகிறது. பலமுறை ஷூட்டிங் நடக்கும் இடங்களில் போராட்டங்கள் நடத்தியதோடு, செட்டின் மீதும் தாக்குதல் நடத்தி வந்தது.

தீபாவளி வெளியீடாக இப்படம் திரைக்கு வந்த நிலையில், நடந்த கலவரங்களால் ரிலீஸ் தள்ளிச் சென்றது. தற்போது  இந்தக் கலவரங்கள் சற்றே ஓய்ந்துள்ள நிலையில், படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். வருகிற 25ஆம் தேதி குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இதேநாளில் அக்‌ஷய் குமார் தயாரித்து, நடித்துள்ள ‘பேட் மேன்’ படமும் ரிலீஸாக இருக்கிறது.

share