Kollywood News

  • Home/
  • Cine News/
  • என் முகத்தை படக்குழுவினரே பார்க்க விரும்பவில்லை!

என் முகத்தை படக்குழுவினரே பார்க்க விரும்பவில்லை!

மலையாளத்தில் உருவாகியுள்ள உயரே என்கிற படத்தில் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட ஒரு விமான பைலட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்வதி. இந்த படம் நேற்று(ஏப்-26) தான் வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பார்வதி பேசும்போது, இந்த படத்தில் எனக்கு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கான மேக்கப் போட்ட பிறகு படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களே என்னுடன் முகம் பார்த்து பேச தயங்கி தலையை கவிழ்ந்தபடி தான் பேசினார்கள்.

அடிக்கடி வந்து பேசிக் கொண்டிருக்கும் சிலரும் இந்த முகத்தோற்றத்தில் என்னை பார்த்து பேச அவ்வளவாக விரும்பவில்லை. நம் சமுதாயத்தில் இதுபோன்று முகத்தில் பாதிப்பு ஏற்பட்ட நபர்கள் மீது மனிதர்கள் பாராமுகம் காட்டுவதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது என தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளார் பார்வதி.

Read More about :

share