Kollywood News

  • Home/
  • Cine News/
  • அதிமுகவிடம் கோரிக்கை வைத்த பாமக

அதிமுகவிடம் கோரிக்கை வைத்த பாமக

அதிமுகவிடம் கோரிக்கை வைத்த பாமக.
அதிமுக கூட்டணியில் இணைவதற்காக, மக்கள் நலனுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் 10 கோரிக்கைகளை  முன்வைத்ததாக ராமதாஸ் தெரிவித்தார்.

அந்த 10 கோரிக்கைகள்
* காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தல்.

* கோதாவரி - காவிரி பாசனத்திட்டம் மற்றும் 20 பாசன திட்டங்களை நிறைவேற்றுதல்.

தமிழகத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

* 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.

* படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

* மணல்குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும்.

* அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல்.

* மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை தடுக்க வேண்டும்.

* பொதுத்துறை , கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

* நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும்.
எனவே ,இந்த கோரிக்கைகளை அதிமுக நிறைவேற்றுமா என பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

Read More about :

share