ஜிமிக்கி கம்மலை ஓரங்கட்டிய ப்ரியா பிரகாஷ்!



இளைஞர்களை பலரை திரும்பி பார்க்க வைத்தவர் தான் ஜிமிக்கி கம்மல் பாடலில் வந்த ஷெரில். தற்போது அந்த ஜிமிக்கி கம்மல் பாடலை ஓரங்கட்டிய மலையாள வரவுதான் இந்த ப்ரியா பிரகாஷ் வாரியார். 

இவர் நடித்ததிருந்த ’ஒன் அதர் லவ்’ என்ற படத்தில் இவர் காட்டிய ஒரு எக்‌ஷ்ப்ரஷன் காட்சி இணையதளத்தில் மிகவும் வைரலாக உலா வர துவங்கியுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என அனைத்திலும் இவரது வீடியோ காட்சிகள் தான் இளைஞர்கள் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. 

இவரை ரசிகர்கள் பலருக்கும் பிடித்து விட்டதால் அவரது ஐ.டி-களை தேடி தேடி பின்பற்றத் தொடங்கி வருகின்றனர். ஒரே நாளில் இவரை இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பேர் பின் தொடர தொடங்கியுள்ளனர். இதனால் அவரை பேட்டி எடுக்க பல பத்திரிக்கை நிறுவனங்கள், யூ ட்யூப் சேனல்கள் தயாராக உள்ளன. 

share