Kollywood News

  • Home/
  • Cine News/
  • ‘திமிரு புடிச்சவன்’ படம் வெளியாவதில் சிக்கல் : தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை

‘திமிரு புடிச்சவன்’ படம் வெளியாவதில் சிக்கல் : தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை

தயாரிப்பாளர் சங்க புதிய விதிகளின் படி, ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் 3வது வெள்ளிக் கிழமை சிறு பட்ஜெட் படங்கள் வெளிவருவதற்கான காலமாகும். ஆனால் விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிருபுடிச்சவன் படம் வருகிற 16ந் தேதி வெளிவரும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இதனால் செய் மற்றும், உத்தரவு மகாராஜா படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் குறைக்கப்படுகிறது என்ற செய்திகள் வெளியானது. 

இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் 

உத்தரவு மகாராஜா, செய், சித்திரம் பேசுதடி 2, காற்றின் மொழி படங்கள் வெளியாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்கள்தவிர வேறு படங்களுக்கு சங்கம் அனுமதி வழங்கவில்லை.

சிறிய படங்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த தேதியில் அனுமதி பெறாத படங்கள் வந்து மேற்படி படங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது சங்கவிதிப்படி, உறுதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுககப்படும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More about :

share