300 திரையரங்குகளில் பிரம்மாண்ட வெளியீடாக வருகிறது ‘புலி முருகன்’..!


                  
கடந்த வருடம் மலையாள திரையுலகில் மோகன்லால் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வெளியிடப்பட்டு 150 கோடி வசூல் சாதனை செய்த படம் ‘புலி முருகன்’. மோகன்லாலின் சினிமா வாழ்க்கைக்கு கிரீடமான  புலிமுருகன் அதே பெயரில் தமிழில் 3D தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது.
 
மலையாளத்தில் புலிமுருகனை தயாரித்த பிரபல பட நிறுவனமான முலக்குபாடம் பிலிம்ஸ் சார்பில் டோமிச்சன் முலக்குபாடம் தான் புலி முருகன் படத்தை தமிழிலும் உருவாக்குகிறார். கதாநாயகியாக கமாலினி முகர்ஜி நடித்திருக்கிறார். மற்றும் ஜெகபதிபாபு, லால், கிஷோர், நமீதா நடித்திருக்கிறார்கள். ஆக்ஷன் மற்றும் அட்வென்சர் படமாக புலிமுருகன் படம் உருவாகி இருக்கிறது.
 
இந்த பிரமாதமான படத்தை இயக்கி இருப்பவர் இயக்குனர் வைஷாக்.. பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் ஆக்சன் காட்சிகளும் அதில் மோகன்லால் கட்டியுள்ள வேகமும் ரசிகர்களை மீண்டு மீண்டும் தியேட்டருக்கு அழைத்துவரும் என்பதில் சந்தேகமில்லை. இந்த படத்திற்கு வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர்  ஆர்.பி.பாலா.
 
புலி முருகன் படம் வரும் ஜூன்-16ஆம் தேதி தமிழகம்  முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியாகிறது. பாகுபலி படத்திற்கு பிறகு தமிழகத்தில் ஒரு மொழிமாற்று திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாவது புலிமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழகமெங்கும் செந்தூர் சினிமாஸ் பட நிறுவனம் வெளியிடுகிறது
 

share