Kollywood News

  • Home/
  • Cine News/
  • இராமநாராயணன் பேரனுக்கு ராதா ரவி வாழ்த்து

இராமநாராயணன் பேரனுக்கு ராதா ரவி வாழ்த்து

ராதா ரவி வாழ்த்து:
     Cinebilla இணையத்தை திரு. ராதா ரவி அவர்களின் வாழ்த்துக்களோடு துவங்கினார். இணையத்தை துவக்கி வைக்கும் முன் ராதா ரவி அவர்கள் கூறியது: நாங்கள் எல்லோரும் தெய்வமாக மதிப்பவர் இயக்குனர் திரு.இராமநாராயணன் அவர்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு அவர் ஆசான் போல. அந்த கலைக்குடும்பத்திலிருந்து வந்திருப்பவர் மெய்யப்பன். அவர் Cinebilla என்னும் இணையத்தை துவக்கியுள்ளார். அவருக்கு மூத்த கலைஞன் என்ற முறையில் சில அறிவுரைகள் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சினிமாக்களுக்கு விமர்சனம் எழுதும்போது சின்ன படம் பெரிய படம் என்ற பாகுபாடு இல்லாமல் மனதில் பட்டதை உள்ளதை உள்ளபடி சொல்லுங்கள்  மேலும் யார் மனதும் புண்படாதபடி விமர்சனங்களை கொண்டுவாருங்கள் என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில்: முன்னணி நடிகர்களை மட்டும் பேட்டி காணாமல் நலிந்த நலிவடைந்த மூத்த கலைஞர்கள் வாய்பிழந்து நிற்கிறார்கள் அவர்களையும்,புது முக நடிகர்களையும்,நல்ல திறமைவாய்ந்த கலைஞர்களை அழைத்து பேட்டி எடுத்தால் அவர்களுக்கும் பட வாய்ப்புகள் கிடைக்க ஏதுவாக இருக்கும். மெய்யப்பன் அவர்கள் ஆரம்பித்த Cinebilla மென்மேலும் வெற்றிபெற்று வளர என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

Read More about :

share