Kollywood News

  • Home/
  • Cine News/
  • சொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் !

சொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் !

புதுக்கோட்டை, ஆலங்குடியைச் சேர்ந்தவர் சமூக சேவகர் கணேசன் 68. இவர், 48 ஆண்டுகளாக சமூக சேவை செய்துவருகிறார். சுனாமி பாதிப்பு துவங்கி, தானே புயல், சென்னை மழை வெள்ளம், மழையால், கேரளா மாநிலம் பாதிப்பு உட்பட பேரிடர் காலங்களில் தன் 515 என்ற எண் அம்பாசிடர் காரில் பயணித்து, பொதுமக்களிடம் வசூல் செய்து 15 லட்சம் ரூபாய்க்கு மேல் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். இதனால், இவரை, 515 கணேசன் என்றே அழைப்பர்

இதேப்போல் தன் அம்பாசிடர் காரில் 5,000த்துக்கும் மேற்பட்ட சடலங்களை இலவசமாக ஏற்றி உரிய இடத்தில் சேர்த்துள்ளார். தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு வரும் கணேசனை பாராட்டி, பெங்களுரைச் சேர்ந்த பல்கலை ஒன்று, கடந்த ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. கடந்த ஆண்டு நவ., 16ல், புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதில், கணேசன் வீடும் சேதம் அடைந்தது.

இதையறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ், கணேசனுக்கு புதிய வீடு கட்டித் தருவதாக அறிவித்து இருந்தார்

அவர் கூறியபடியே ஆறு மாத காலத்தில் 10 லட்சம் ரூபாய் செலவில் கணேசனுக்கு புதிய வீட்டை கட்டினார் லாரன்ஸ். வீட்டை கணேசனிடம் ஒப்படைக்கும் விழா, ஆலங்குடியில் நடந்தது. ராகவா லாரன்ஸ் பங்கேற்று, குத்து விளக்கேற்றினார். 

கணேசனுக்கு புதிய வீடு கட்டிக் கொடுத்தது, அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, என்றார்.

Read More about :

share