Kollywood News

  • Home/
  • Cine News/
  • மீண்டும் தள்ளிப் போகுமா ரஜினியின் ‘2.O'..??

மீண்டும் தள்ளிப் போகுமா ரஜினியின் ‘2.O'..??


ஷங்கர் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘2.o'. 

சென்ற வருடம் தீபாவளிக்கே வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஜனவரி 26, பின் ஏப்ரல் 27 என தொடர்ந்து தாமதமானது. தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் ஷங்கர் "டீஸர் பணிகள் நடந்து வருகிறது. அதில் நிறைய சிஜி பணிகள் முடிக்கவேண்டியுள்ளது. 

அது முடிந்ததும் வெளியிடப்படும்" என அறிவித்தார். இந்நிலையில் 2.0 ரிலீஸ் தேதி மீண்டும் தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராபிக்ஸ் பணிகள் முடிய தாமதமானால் படம் மே மாதத்திற்கு தள்ளிபோகலாம் என கூறப்படுகிறது

share