Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினிகாந்த், தனுஷ் இணைந்து நடிக்கின்றனர், இயக்குனர் யார் தெரியுமா?

ரஜினிகாந்த், தனுஷ் இணைந்து நடிக்கின்றனர், இயக்குனர் யார் தெரியுமா?

ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தின் படப்பிடிப்பில் செம்ம பிஸியாகவுள்ளார். இப்படம் முடிந்து ஒரு சில படங்களில் ரஜினி நடிக்க முடிவு செய்துள்ளார்.

அதன் பிறகு கட்சி ஆரம்பித்து அரசியலில் முழுமையாக இறங்கலாம் என முடிவு செய்துள்ளார், இந்நிலையில் ரஜினி சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜை அழைத்து தன் இரண்டாவது மருமகன் விசாகனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்க சொன்னதாக செய்திகள் வந்தது.

ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, அதே நேரத்தில் ரஜினி, தனுஷ் இருவரும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பதாக முடிவு செய்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

share